தர்மபுரி மாவட்டம் பி. பள்ளிப்பட்டி கெபி திருவிழாமிகவும் பிரபலமானது 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்தத் திருவிழாவில் அனைத்து மதத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பி பள்ளிப்பட்டி கெபி திருவிழா வருடாந்திர பண்டிகை கொரொன தொற்று காரணமாக 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது, இந்த வருடம் நடைபெற்ற கெபி திருவிழாவை காண கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாசற்ற இரத்தம் என்ற இயேசு கிறுஸ்துவின் வரலாற்று நாடகத்தை காண விடிய விடிய பொதுமக்கள் விழித்திருந்து பார்த்து ரசித்தனர்.
லூர்துபுரம் கெபி மலையில் 555 நடிகர்கள், 55 மேடைகளில் மலை முழுவதும் காட்சிகள் அமைக்கப்பட்டு, ஒலியும், ஒளியும் நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மத அடிப்படையாகக் கொண்ட உலகம் உருவானது முதல் இயேசு பிறந்து இறந்த பின் உயிர்த்தெழுந்த நாள் வரையிலான வரலாற்று சிறப்புகளை, சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் நடித்து காண்பிக்கும் நாடகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.