தீர்த்தமலையில் மொட்டை அடிக்க வந்த பக்தர்களுக்கே மொட்டையடிக்கும் பூசாரி - அபிஷேகம் செய்ய 3000 ரூபாய் கூகுல் பேவில் காணிக்கையாக பெறப்பட்டது அம்பளமாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மிகவும் பழமையான கோவில். வறட்சியான காலங்களிலும் இங்கு ஏழு வகையான தீர்த்தங்கள் கிடைக்கப்பெறுவது என்பது மிகவும் அதிசயமான ஒன்று. பக்தர்கள் தங்களது நேர்திக்கடனை செலுத்தவும், மன நிம்மதிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருவது வழக்கம். இயற்கை சூழலோடு ரம்மியமான தோற்றத்தோடு விளங்கும் இந்த திருக்கோவிலுக்கு ஆயிரம் படிக்கட்டுகளை கடந்து சென்று, மழையில் அமைந்துள்ள சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்கள் ஏராளம். இங்கு மொட்டை அடித்து காது குத்தி அபிஷேகம் செய்ய பணிபுரியும் பூசாரிகள் ரூபாய் 750 முதல் 3000 வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான ஆடியோ ஆதாரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் பணிபுரியும் பூசாரி பாலாஜி என்பவர் பக்தர்களிடம் அவர்களது குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்தி அபிஷேகம் செய்ய ரூபாய் 3000 முதல் 4000 வரை பணம் வசூல் செய்ததாகவும் சாதாரன மக்களிடம் 800 ரூபாய் வரை வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கான ஆடியோ பதிவுகளும் தற்போது கிடைத்துள்ளன.
மொட்டை அடிக்க வரும் பக்தர்களுக்கே மொட்டை அடிக்கும் இதுபோன்ற பூசாரிகளால் மன நிம்மதிக்காக குடும்பத்தோடு இறைவனை வழிபடச் செல்லும் பக்தர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் பூசாரிகள் மீது இந்து சமயத் அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.