தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி HOPE நிறுவனத்துடன் இணைந்து பார்வைத்திறன் குறைபாடுள்ள ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்திறன் சார்ந்த சிறப்பு பயிற்சியை இன்று (29.04.22) தருமபுரி வட்டாரக் கல்வி அலுவலக பயிற்சிக் கூடத்தில் நடத்தியது.
இப்பயிற்சியை தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன் தொடங்கிவைத்து தகவல் தொழிற்நுட்ப உபகரணங்களை பார்வைத்திறன் குறைபாடுள்ள ஆசியர்களுக்கு வழங்கி பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
இப்பயிற்சியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 31 பார்வைத்திறன் குறைபாடுள்ள ஆசியர்களுக்கு, TN EMIS, DHIKSHA உள்ளிட்ட 78 செயலிகளை பயன்படுத்தி கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் கருத்தாளர்கள் திரு.பிரபு, திரு.தமிழ்மணி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.இரவிக்குமார், உதவித்திட்ட அலுவலர் திருமதி.மஞ்சுளா, வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு.நடராஜன், திரு.ஜீவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அருண்குமார் செய்திருந்தார்.