ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறையின் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது, இந்நிகழ்வில் மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் தலைமை வகித்தார், கல்லூரி முதல்வர் முனைவர் சா.எழிலன் முன்னிலையுரை வழங்கினார், கல்லூரி நிர்வாக மேலாளர் ரா கணேஷ் நோக்கவுரை வழங்கினார், கல்லூரி துணை முதல்வர்களான முனைவர் சி.காமராஜ், முனைவர் சி.தமிழரசு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சுவிங்கர் எண்டர் பிரைஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திக் கலந்து கொண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களை நேர்காணல் செய்து 59 மாணவர்களை தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்வை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் முனைவர் அ.இம்தியாஸ் ஒருங்கிணைத்தார்.