Type Here to Get Search Results !

மணியக்காரன்கொட்டாய் ஶ்ரீ பரமேஸ்வரன் மலை மண்டு பட்டாளம்மன் கோவில் திருவிழா நடத்த ஆலோசனை கூட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் ஊராட்சி மணியக்காரன்கொட்டாய்  கிராமத்தில்    500 ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பரமேஸ்வரன் மலை மண்டு பட்டாளம்மன் திருவிழா  7 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்த இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்  வருகின்ற ஆனி மாதம் 13ம் தேதி 27.06.2022 முதல் 29.06.2022 வரை மூன்று நாட்கள் இத்திருவிழா நடைபெறும் என்றும் விழாவின்போது சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படும் என்றும் திருவிழாவில் மாவிளக்கு தீ மிதித்தல் சாமி குதிரைமேல் அழைப்பு உள்ளிட்டவை நடைபெறும். 

மேலும் இவ்விழாவில் திம்மம்பட்டி (தாய்கிராமம்), மணியக்காரன்கொட்டாய், தீர்த்தாரஹள்ளி, கவுண்டனூர், பட்ரஹள்ளி, கொம்மநாயக்கனஹள்ளி, பாறையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். 

இந்த நிகழ்ச்சியில் தர்மகர்த்தா மாதப்பன், ஒபிலிகவுண்டர் கணேசன், நாட்டு கவுண்டர் கிருஷ்ணன், ஏழு கிராம ஊர்கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள் மற்றும் இளைஞர்கள் கோவில் நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies