தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் முதலாவது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் முனைவர் செண்பகலக்ஷ்மி தலைமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளிடையே பேசும்போது மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததன் மூலம் உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கு அதிக அளவில் சேர்ந்து பதவிகளை வகித்து வருவதாகவும் எனவே மாணவ மாணவிகள் அனைவரும் கட்டாயம் கல்வி பயின்று பெரிய பதவிகளுக்கு சென்று தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
இளநிலை பட்டப்படிப்பு முடித்த 800 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள், கல்லூரி அளவில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.