தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே குட்லாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆனந்தன்(55) என்பவருக்குச் சொந்தமான 15 ஏக்கர் மாந்தோட்டத்தில் செந்தூரா, பெங்களூரா, அல்போன்சா, பீத்தர், சக்கரகுட்டி, பங்கன்பள்ளி உள்ளிட்ட மா வகைகள் சாகுபடி செய்து வருகின்றார்.

கிராமம் அருகே மாந்தோட்டம் உள்ளதால் மது குடிப்பது சீட்டு விளையாடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தோட்டத்தில் ஈடுபடுவதால் இதைத் தவிர்க்கும் பொருட்டும், மா மரங்களுக்கும், மாங்காய்களுக்கும் பாதுகாப்பு கருதி விவசாயத் தோட்டம் முழுவதுமாக கம்பி வேலி அமைப்பதற்காக பணியை மேற்கொண்டுள்ளார்.

இதை பிடிக்காத சில மர்ம நபர்கள் இரவு அறுவடைக்கு தயாராக இருந்த 40-க்கும் மேற்பட்ட மாமரங்கள் இரவோடு இரவாக வெட்டி சாய்த்து உள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த மா மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.