தலைமை ஆசிரியர் மா.பழனி வாழ்த்துரை வழங்கினார். வாசகர் வட்ட தலைவர் திரு. சி.இராசசேகரன், அறிஞர் அண்ணா, பெர்னாட்ஷா, கார்ல் மார்க்ஸ் போன்ற அறிஞர்கள் நூலக நூல்களை வாசித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நூலக நூல்களை அதிகம் வாசிக்க வேண்டும் என உரையாற்றி உலக புத்தக தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற 50 மாணவர்களுக்கான உறுப்பினர் அட்டையை அளித்தார்.
அரசுக் கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிவப்பிரகாசம் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் புத்தகம் வழங்கி புத்தகங்களை எவ்வாறு வாசிக்க வேண்டும், அதிக அளவில் அனைவராலும் புத்தகம் வாசிப்பதால் சமுதாயம் முன்னேறும் என உரையாற்றினார். இவ்விழாவில் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் திருமதி. A. பவுலின் மேரி மற்றும் திருமதி. R. ருக்குமணி தலா ரூ.1000/- செலுத்தி புரவலர்களாக இணைந்துக்கொண்டனர்.
மேலும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தாரின் புத்தக கண்காட்சி 23.04.20222 முதல் 27.04.2022 மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் விழா இறுதியில் மூன்றாம் நிலை நூலகர் திருமதி. த.தமிழ்செல்வி நன்றி கூறினார்.