தமிழக தொல்லியல் இடங்கள் ஓர் பார்வை என்ற பொருண்மையில் மாநில அளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வரலாற்றுத்துறைத் தலைவர் மா.சந்திரன் வரவேற்று பேசினார். மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் நிகழ்விற்கு தலைமை வகித்தார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சா.எழிலன் முன்னிலையுரை வழங்கினார். கலைப் பிரிவின் துணை முதல்வர் முனைவர் அ.இம்தியாஸ் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் வரலாற்றுத்துறை யின் உதவிப் பேராசிரியர் கோ.திருவாசகம் நோக்கவுரை வழங்கினார்.
திருச்சி தமிழ்நாடு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சி. சிவக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழக தொல்லியல் இடங்கள் பற்றியும் அதன் மூலம் கிடைத்த தொல்லியல் எச்சங்கள் பற்றி மாணவர்களிடையே உரையாற்றினார். நிறைவாக முதலாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவி கெ.அருள்பாரதி நன்றி கூறினார்.
நிகழ்வில் கல்லூரி துணை முதல்வர்கள் முனைவர் சி.காமராஜ், முனைவர் சி.தமிழரசு , நிர்வாக மேலாளர் ரா.கணேஷ் , துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.