தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை பகுதியில் கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து போதை ஊசிகளை வாங்கி விற்பனை செய்வதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து போதை ஊசிகள் விற்றதாக வழக்கில் கைதான மையில் கொட்டாய் பகுதியை சேர்ந்த வஜ்ரவேல் (வயது42), சாமிரெட்டிப்பட்டி அடுத்துள்ள கமலநத்தம் பகுதியை சேர்ந்த முருகேசன் (46) ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதியமா ன்கோட்டை போலீசார் போதை ஊசிகள் விற்றதாக கைதான இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.