தமிழக அரசின் ஆணைப்படி வரும் மே 1 அன்று இலாபலர் தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என அறிவித்திருந்தது, அதன்படி தருமபுரி மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் அதியமான் கோட்டை ஊராட்சியில் மே1 ஞாயிற்று கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது, இந்த கூட்டத்திற்கு பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்குவதற்காக தண்டோரா மூலம் ஊராட்சி முழுவதும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் வழிகாட்டுதலின்படி ஊராட்சி து.தலைவர் ஜெகநாதன் ஊராட்சி செயலாளர் திருவருட்செல்வன் உள்ளிட்டோர் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்ததோடு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.