தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சந்தை மேடு பகுதியில் வாணியாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாணீஸ்வரன் கோவிலின் எதிர் கரையில் பழமை வாய்ந்த அனுமன் கோவில் உள்ளது. அந்தக் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அனுமன்சிலை இருந்தது. தற்பொழுது சிலை இல்லை. கோயில் நிலத்தில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து அஸ்திவாரம் எழுப்பி கட்டிடம் கட்ட தயாராகி வருகின்றனர். விவசாய நிலத்தில் வெட்டப்பட்ட கிணற்றுக் காண ரசீது உள்ளது. நிலத்தில் இருந்த கிணற்றை காணவில்லை என்ற நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையை போன்று அனுமன்கோவில் உள்ளது ஆனால் உள்ளே இருந்த அனுமன் சிலையை காணவில்லை கண்டுபிடித்து கொடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் பழமை வாய்ந்த ஸ்ரீ அனுமன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட அனுமன்சிலையை காணவில்லை, மேலும் சாமியின் ஆபரணங்கள் எங்கே போனது என்று தெரியவில்லை. அனுமன் கோவில் உள்ள பகுதி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் கட்டடம் கட்ட தயாராகி வருகின்றனர். கோவிலின் அருகில் ஆற்றுப் புறம்போக்கு நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி உள்ளது. தற்பொழுது பாழடைந்து காணப்படும் ஸ்ரீ அருள்மிகு அனுமன் கோவிலை இடித்து அதே இடத்தில் புதிதாக கோவில் கட்டிக் கொடுத்தாள் நாங்கள் அனுமனுக்கு பூஜை செய்து பராமரித்து கொள்வோம். அரசு காலதாமதம் செய்தால் அரூரில் அனுமன் கோயில் இருந்ததற்கான வரைபட ஆதாரம் மட்டுமே அரசிடம் இருக்கும் நிலை ஏற்படும், முன்பு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
.gif)

