பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் G.K மணி அவர்கள் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். பின்னர் அங்கு பணியாற்றும் பணியாளர்களிடத்தில் சிறிதுநேரம் கலந்துரையாடினார், பின்னர் அவர்களின் வருகை பதிவேடு கோப்புகளை எடுத்து ஆய்வு செய்தார்,
மேலும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வினை மேற்கொண்டார். இப்பள்ளியினை பார்வையிட்டு அங்கிருந்த மாணவர், மாணவிகளிடையே மற்றும் ஆசிரியர்கள் உடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு சென்று பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான வசதி உள்ளதா என மருத்துவர்கள் செவிலியர்கள் இடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மருத்துவர் கிருஷ்ணன் மற்றும் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம், பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க துணை தலைவர் சத்தியமூர்த்தி, மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கே.பி முருகன், ஜெகதீசன், ராசா உலகநாதன் பென்னாகரம் தொகுதி அமைப்பு செயலாளர் சுதாகிருஷ்ணன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
.gif)


.jpeg)