ஒருங்கிணைந்த விவசாயிகள் நலசங்கம் சார்பில், தருமபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் விவசாயம், தோட்டக்கலை மற்றும் பால் பண்ணை கண்காட்சி நேற்று துவங்கியது.
இக்கண்காட்சியை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தலைவர் பொன்குமார் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ. சின்னசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பி. சுப்பிரமணி, மருதம் நெல்லி கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.கோவிந்த் வாணியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கே.சுப்பிரமணியன், பத்திரிகையாளர் பொம்மிடி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட விவசாயம், கால்நடை வளர்ப்பு, தோட்டக் கலை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, இக்கண்காட்சி வருகின்ற ஞாயிறு வரை நடைபெற உள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டாளர் நல்லியப்பன் தெரிவித்துள்ளார்.