தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி நான்கு ரோடு பகுதியில் திமுக ஒன்றிய நகர கழக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாரண்டஅள்ளி நகர செயலாளரும் பேரூராட்சி தலைவருமான வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் இன்பசேகரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை துவக்கி வைத்து கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, இளநீர், நீர்மோர் , வெள்ளரி உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துனைத் தலைவர் கார்த்திகா, மாவட்ட கவுன்சிலர் ராஜா, நகர இளைஞர் அணி அமைப்பாளர் யதிந்தர், முன்னாள் மாவட்ட பிரதிநிதி கோவிந்தசாமி, ஊராட்சிமன்ற தலைவர்கள் குட்டி, துரை, பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்ட திமுக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

