இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் தமிழ்செல்வன் தலை வகித்தார், மாவட்ட து.தலைவர் குணசேகரன், செயலாளர் மாணிக்கம், முன்னாள் மாவட்ட துனைத் தலைவர் ருத்ரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கவும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகங்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கொரோனவை காரணம் காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், சாலைப் பணியாளர்களின் 41- மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் என்றும், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடத்தை நிரப்ப வேண்டும், இருபத்தி ஒரு மாத ஊதிய மாற்ற நிலுவையை வழங்கிட வேண்டும்.
கொரோனா காலத்தில் இருந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.