Type Here to Get Search Results !

அதிகாரிகளின் அலட்சியத்தால் இலட்சங்களை இழக்கும் ஏழைகள்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் ஏழை எளிய மக்கள் தங்கள் வீட்டில் நடைபெறும் திருமணம், வளைகாப்பு, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த அரசு திருமண மண்டபம் கட்டி தர வேண்டுமென  கோரிக்கை மனுக்கள் அளித்தனர், அதன் அடிப்படையில்  எர்ரணஹள்ளி, பெலமாரனஅள்ளி, நல்லூர், பேளாரஅள்ளி, சாமனூர், அத்திமுட்லு உள்ளிட்ட ஊராட்சிகளில் சமையலறையுடன் கூடிய திருமண மண்டபம்   ரூ.85 லட்சம் வீதம் 13 திருமண மண்டபகங்கள்  11 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி வளர்ச்சி மற்றும் முகமை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்து ஒரு வருடம் கடந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராததால் ஏழை எளிய பொதுமக்கள் திருமணம் நடத்த லட்சக்கணக்கில் செலவு செய்து தனியார் திருமண மண்டபத்தை தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் அரசு மண்டபங்களை சில சமூக விரோதிகள் கூடாரமாகவும்,  குடிகாரர்கள்  மது அருந்தும் இடமாக மாறி வருவதாக கிராம பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு திருமண மண்டபத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884