பென்னாகரம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணபிரான் மனைவி முரு கம்மாள் (68). இவர், செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலிருந்து ஆதனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு நடந்து சென்றார்.
அப்போது, நல்லாம்பட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத் தில் வந்த இரண்டு நபர்கள் மூதாட்டி முருகம்மாளிடம் இருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து பென்னாகரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இரு சக்கர வாகனத்தில் வந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
.gif)

