Type Here to Get Search Results !

சர்க்கரை ஆலை முருகன் கோவிலில் தமிழ் வருட பிறப்பு மற்றும் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீவிஜயகணபதி, ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்களில் சித்திரை மாத தமிழ் வருட பிறப்பு மற்றும்  குரு பெயர்ச்சியை முன்னிட்டு உலக நலன் கருதியும், சர்க்கரை ஆலை மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதியும், மழை வேண்டியும் மேலாண்மை இயக்குநர் சங்கர் இ.ஆ.ப அவர்களின் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தி பூஜை செய்தினர்.

இதில் ஆலை தொழிலாளர்கள், அலுவலர்கள், பணி புரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், கரும்பு விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகம் செய்திருந்தது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies