ஏப்ரல் 14 சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு சாஹிப் பயிற்சி மையத்தின் தலைவர் சொ.கார்த்தியின் தலைமையில் அறிவுசார் முன்னெடுப்பாக ஒருங்கிணைப்பு செய்து போளையம்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு பணியாளர்கள், நண்பர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், தோழமைகள் ஒத்துழைப்போடு இவ்விழாவினை சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது, மற்றும் அதற்கான அழைப்பிதழில் உள்ளபடி பேரணியில் பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல்,300 மரக்கன்று மற்றும் 30 பதாகைகள் உடன் பேரணி நடைபெற்றது.
மாணவ மாணவிகள் அம்பேத்கரை பற்றி சிறப்பான பேச்சு உரை நிகழ்த்துவது, உச்சத்திலே ஒரு சூரியன் என்ற அம்பேத்கருடைய பாடலுக்கு அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கைத்தட்டலுக்கு மத்தியில் நடனம் அறக்கட்டளை சிறப்பான முறையில் அரங்கேறியது.
அம்பேத்கர் கூறிச் சென்ற அறிவுசார் கட்டூரைகள் மற்றும் வரிகளை வைத்து ரேப் பாடல் மிகச் சிறப்பான முறையில் அனைவரின் நடுவிலும் பாடி அசத்தினர். இறுதியாக இனிப்புகள் வழங்கப்பட்டு சிறப்பான முறையில் மாணவ மாணவிகள் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் உடன் வீடு திரும்பினர்.
.gif)

