கர்நாடக மாநிலம் பெங்களூர் நந்தினி லேவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் இவரது மகன் ஜேம்ஸ் பவுல் வயது22 தனியார் வங்கியில் டேட்டா ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.
பின்னர் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குடும்பத்துடன் குளித்தனர். அப்போது ஜேம்ஸ் பவுல் திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். ஜேம்ஸ் பவுலை காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாக பெற்றோர் ஒகேனக்கல் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உடலை தேடி வந்தனர். இந்த நிலையில்நேற்று மாலை ஆலம்பாடி காவிரி ஆற்றில் பகுதியில் உடல் கரை ஒதுங்கியது.
இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த ஜேம்ஸ் பவுலின் உடலைப் பார்த்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.