ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது, இந்த வேலைவாய்ப்பு முகாமை மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் தொடங்கி வைத்தார், கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.எழிலன் முன்னிலை வகித்தார்.
கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் முனைவர் அ. இம்தியாஸ் நோக்கவுரை வழங்கினார். வேலைவாய்ப்பு முகாமில் பெங்களூர் இயர்மீ நிறுவனம் பங்கேற்று முதற்கட்ட கலந்தாய்வை நடத்தினர். இம்முகாமில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். முகாமில் கல்லூரி துணை முதல்வர்கள் முனைவர் சி.காமராஜ் , முனைவர் சி. தமிழரசு , நிர்வாக மேலாளர் ரா.கணேஷ் , ப.முனியப்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.