அரசு துறைகளில் காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும். நகர்ப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறையில் வேலை நியமனம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 வழங்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சைக்கிள் பிரசார பயணம் மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் துவங்கிய இப் பிரசார பயணம், ராயக்கோட்டை, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, திருமல்வாடி, ஆகிய பல்வேறு பகுதிகள் வழியாக தருமபுரி தொலைத் தொடர்பு நிலையம் அருகே நிறைவடைந்தது. அங்கு, சிஐடியு தொழிற்சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராஜன் தலைமையில் நடை பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் பாப்பாரப்பட்டிக்கு வந்தனர். செயலாளர்கள் ஆ. ஜீவானந்தம் (தருமபுரி),சுரேஷ் (கிருஷ்ணகிரி), விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அர்ஜூனன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, சிஐடியூ மாவட்டத் தலைவர் பி.ஜீவா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, தருமபுரி நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பென்னாகரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில சைக்கிள் பேரணிக்கு பாப் பாரப்பட்டியில் வரவேற்பளிக்கப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற முழக்கத்தோடு தமிழகத்தில் நான்கு முனைகளில் இருந்தும் கடந்த 21ஆம் தேதி ஜனநாயக வாலிபர் சங் கத்தின் சைக்கிள் பேரணி துவங்கி மே 1ஆம் தேதி திருச்சியில் நிறைவடைகிறது. இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க் கிழமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சேலம் செல்லும் சைக்கிள் பயணக் குழுவினர் தருமபுரி மாவட்டம், பாப்பரப்பட்டி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த அவர்களுக்கு வட்டாரத் தலைவர் சிலம்பரசன் தலைமையில் நிர்வாகி முகிலன் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவர் பிருந்தா நடராஜன், திமுக நகர செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலை வர்கள் கிருஷ்ணன், முருகன் ஆகியார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்யோர் வரவேற்றனர்.