நிறைமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை வருவாய் கோட்டாச்சியர் விசாரணை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

நிறைமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை வருவாய் கோட்டாச்சியர் விசாரணை.

அரூர் அருகே உள்ள  ஒடசல்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(23) இவருக்கும் மொரப்பூர் அருகே உள்ள அரசு மொரசபட்டியை சேர்ந்த சிங்காரம் என்பவரது மகள் சோனியா(21) என்பவருக்கும்  கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது கணவன் மனைவியும் ஒடசல்பட்டியில்  குடும்பம் நடத்தியுள்ளனர்  இதனிடையே நேற்று மாலை ஒடசல்பட்டியில் தனது வீட்டில்  சோனியா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும்  அவரது  தந்தை சிங்காரத்திற்கு  தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

ஒடசல்பட்டிக்கு சென்று பார்த்த அவர் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக அரூர் போலிசில் புகாரளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அரூர் போலிசார்  தற்கொலை செய்து கொண்ட பெண் எட்டுமாத கர்பிணி என்பதால் வருவாய் கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார், கர்பிணி பெண் பலியான தொடர்ந்து அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad