ஒப்பந்தபுள்ளி : பூதிநத்தம் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி. (ந.க.எண்: 3089/2021/அ2(6) நாள்: 14.03.2022) - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

ஒப்பந்தபுள்ளி : பூதிநத்தம் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி. (ந.க.எண்: 3089/2021/அ2(6) நாள்: 14.03.2022)

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், 2021-2022 ஆம் ஆண்டுக்கு கனிமங்களும் குவாரிகளும் சிறுகனிமம் திட்டத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட கீழ்காணும் பணியை செய்திட கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 12.04.2022 ஆம் தேதி செவ்வாய்கிழமை பிற்பகல் 3.30 மணி வரை பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தாரர்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி நமூனாக்கள் வரவேற்கப்படுகிறது. 

மேலும் அன்றே மாலை 4.00 மணிக்கு ஆஜரில் உள்ள ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர்(அல்லது) அவரது அதிகாரம் பெற்ற அலுவலரால் முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.

நிபந்தனைகள்:

  1. ஒப்பந்தப்புள்ளி முன்வைப்புத் தொகை ரொக்கமாக செலுத்தப்பட வேண்டும்.
  2. இவ்வூராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி அளிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் இப்பணிகளுக்கு வெளி ஏலம் விட கூடாது. அவ்வாறு வெளி ஏலம் விட்டால் ஒப்பந்த புள்ளி விதிமுறைகளின்படி ஒப்பதந்தத்தை இரத்து செய்வதுடன், ஒப்பந்ததாரர் பெயர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
  3. இலாகா மூலம் வழங்கப்படும் பொருட்களுக்கு இலாகா மூலம் நிர்ணயிக்கப்படும் தொகைக்கு ஏற்ப தொகை பட்டியலில் பிடித்தம் செய்யப்படும்.
  4. பணி துவங்கும் முன்னர், பணி நடைபெறும் போது, பணி முடிவுற்ற பின்னர் மூன்று நிலைகளில் GPS நிழற்படங்கள் எடுக்கப்பட வேண்டும்.
என அறிவிக்கப்பட்டுள்ளது,  தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இது தொடர்பாக மேலும் விவரங்களை பெற்று ஒப்பந்தத்தில் பங்கேற்கலாம்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad