தர்மபுரி மாவட்டம், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் உயிரிழப்பு - உயிரிழந்த விவசாயி கணேசன் அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகவும் வேதனையாற்று உயிரிழந்த விவசாயி கணேசன் அவர்களது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு முதலமைச்சரின் பொது நிவாரன நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
.gif)


