தர்மபுரி மாவட்டத்தில் போதை வஸ்த்துக்கள் கஞ்சா விற்பனை அதிகரித்து வந்த நிலையில் இதை கட்டுப்படுத்தும் வகையல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களின் நடவடிக்கையின் பேரில் காவல்துறையினர் தீவீர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
மாரண்டஅள்ளி அடுத்த கரடிகுட்டை கிராமத்தில் வீட்டருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர் கரடிகுட்டை கிராமத்தை சேர்ந்த வஜ்ரவேல் (வயது.42) என்பவரை கைது செய்து அவருடைய வீட்டருகே வளர்க்கப்பட்ட கஞ்சா செடி மற்றும் 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
.gif)

