நாமக்கல் மாவட்டம் திருங்செங்கோடு அடுத்த டி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 39). இவர் ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு நிலக்கடலை பாரம் ஏற்றிக்கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வந்த போது திடீரென வளைவில் லாரி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் தங்கராஜ், படுகாயம் அடைந்தார் உடனே அருகில் இருந்தவர்கள், டிரைவர் தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தொப்பூர் போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.