Type Here to Get Search Results !

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 21ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் தொழிற்பழகுநர் சட்டம் 1961 ன் படி 30 க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தொழிற்பழகுநர்களை ஆண்டு தோறும் சேர்த்து அவர்களது தொழிற்சாலைகளில் மாதந்தோறும் உதவித்தொகையுடன் பழகுநர் பயிற்சி அளித்திட வேண்டும். பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதற்காக தொழிற்சாலைகள் மற்றும் ITI - யில் பயிற்சி பெற்ற மாணவர்களை இணைக்கும் பொருட்டு ஆண்டு தோறும் அந்தந்த மாவட்டங்களில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்திட இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து தொழிற்சாலைகளில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு 2022-ம் ஆண்டிற்கான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வருகின்ற 21.04.2022 அன்று தருமபுரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 09.00 மணி முதல் 05.00 மணி வரை நடைபெற உள்ளதால் இதுநாள் பழகுநர் பயிற்சி முடிக்காத, அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மை சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies