மாவட்ட அளவிலான தடகள் போட்டிகள் நடைபெறும் விவரம்:
கை, கால் ஊனமுற்றோர் (Physically Challenged Orthopedically Handicapped Men & Women)
1. 50மீ ஓட்டம் - கால் ஊனமுற்றோர்
2. 100மீ ஓட்டம் - கை ஊனமுற்றோர்
3. 50மீ ஓட்டம் - குள்ளமானோர்
4. குண்டு எறிதல் - கால் ஊனமுற்றோர்
5. 100மீ சக்கர நாற்காலி - இருகால்களும் ஊனமுற்றோர்
பார்வையற்றோர் (Visually Impaired - Total Blind & Partially Sighted Men & Women)
1. 50மீ ஓட்டம் - முற்றிலும் பார்வையற்றோர்
2. 100மீ ஓட்டம் - மிக குறைந்த பார்வையற்றோர்
3. நின்ற நிலையில் தாண்டுதல் மிக குறைந்த பார்வையற்றோர்
4. குண்டு எறிதல் - முற்றிலும் பார்வையற்றோர்
5. Soft Ball - மிக குறைந்த பார்வையற்றோர்
மன நலம் பாதிக்கப்பட்டவர் (Intellectually Challenged Mentally Retarded Men & Women)
1. 50மீ ஓட்டம் - புத்தி சுவாதீனம் தன்மை முற்றிலும் இருக்காது
2. Soft Ball எறிதல் - புத்தி சுவாதீனம் தன்மை முற்றிலும் இருக்காது
3. 100மீ ஓட்டம் - புத்தி சுவாதீனம் தன்மை நல்ல நிலையில் இருக்கும்
4. நின்ற நிலையில் தாண்டுதல் புத்தி சுவாதீனம் தன்மை முற்றிலும் இருக்காது
5. குண்டு எறிதல் - புத்தி சுவாதீனம் தன்மை நல்ல நிலையில் இருக்கும்
காது கேளாதோர் (Hearing impaired - Deaf Men & Women)
1. 100மீ. ஓட்டம்
2. 200மீ. ஓட்டம்
3. நீளம் தாண்டுதல்
4. குண்டு எறிதல்
5. 400 மீ ஓட்டம்
மாவட்ட அளவிலான குழு போட்டிகள் நடைபெறும் விவரம்
கை கால் ஊனமுற்றோர்
1. இறகுபந்து (ஒற்றையர் மற்றும் இரட்டையர் ) - 1 அணிக்கு 5 வீரர் வீராங்கனைகள்
2. மேஜைப்பந்து - 1 அணிக்கு 2 வீரர்/வீராங்கனைகள்
பார்வையற்றோர்
1. வாலிபால் - 1 அணிக்கு 7 வீரர்/வீராங்கனைகள்
மனநலம் பாதிக்கப்பட்டோர்
1. எறிபந்து - 1 அணிக்கு 7 வீரர்/வீராங்கனைகள்
காதுகேளாதோர்
1. கபாடி - 1 அணிக்கு 7 வீரர்/வீராங்கனைகள்
மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. போட்டிகள் காலை 09.00 மணிக்கு தொடங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் ஒரு வீரர், ஒரு பிரிவில், ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் வீரர்/வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும், குழு போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்று மாவட்ட மறுவாழ்வு அதிகாரி அவர்களால் வழங்கப்பட்ட சான்று தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் சான்று இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல் உடன் எடுத்து வர வேண்டும்.
மாவட்ட அளவிலான குழு மற்றும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்/வீராங்கனைகள் மாநில அளவிலான தடகள போட்டிக்கு அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள்., எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் 22.04.2022 அன்று நடைபெறவுள்ள குழு மற்றும் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

