எனவே, தொழிற்சாலைகள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் நேரடி கலந்துரையாடல்களை எளிதாக்குவதற்கும், வாரியத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முறையில் செயல்படுத்துவதற்கும், வாரியம் "நேரடி கலந்தாய்வு அமர்வு" (OPEN HOUSE SESSION) நடத்த முன்வந்துள்ளது. தனிநபர் / தொழிற்சாலைகள் | தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / பொது நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள / மாசு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இசைவாணைகள் குறித்து புகார் செய்ய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் / கருத்துகளை தெரிவிக்க இந்த அமர்வில் பங்கேற்று சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகளை சந்திக்கலாம்.
நேரடி கலந்தாய்வு அமர்வு ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும், அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மற்றும் வாரியத்தின் தலைமை அலுவலகத்திலும் நடைபெறும். 5 ஆம் தேதி விடுமுறையாக இருப்பின், அடுத்த வேலை நாளில் நடைபெறும்.
மேலே கூறப்பட்ட நோக்கத்திற்காக வாரியத்தின் எந்த அலுவலகத்திலும் எந்தவொரு நபரும் முன் தகவல் / அனுமதியும் இல்லாமல் நேரடி கலந்தாய்வு அமர்வில் பங்கேற்கலாம், இருப்பினும், நேரடி கலந்துரையாடலில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்கள் வருகைக்கு முன்னதாகவே இதற்காக வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதன் மூலம் வாரிய அதிகாரிகள் பங்கேற்பாளர்களுக்கு நேரடி கலந்துரையாடல் நாளில் அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவும் பதிலளிக்க இயலும். இதற்காக வாரிய இணையதளமான www.tnpcb.gov.in இல் "OPEN HOUSE" என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் வருகையின் போது "ஆதார் அட்டையை" தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் முதல் நேரடி கலந்தாய்வு அமர்வு 05.04.2022 அன்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அதியமான்கோட்டை-ஓசூர் புறவழிச்சாலை, ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், தருமபுரி மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.