தருமபுரி – பிப்ரவரி 18:
தருமபுரி மாவட்டத்தில் உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பாலக்கோடு அறிவு திருக்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வணிகர் சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார். வணிகர் சங்க மாவட்ட அமைப்பாளர் சரவணன் சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு அலுவலர் உதயகுமார், உதவி பொறியாளர்கள் கிருஷ்ணன், ஸ்ரீதர், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, பயிற்சியாளர் காமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்
பிளாஸ்டிக் கவர், பாலித்தீன் பைகள் போன்ற தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நலத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. குறிப்பாக:
-
சூடான டீ, பால், சாம்பார் போன்றவற்றை நெகிழி கவர்களில் பார்சல் செய்யக் கூடாது
-
உணவுப் பொருட்களை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் பொட்டலமிடக் கூடாது
-
நீண்ட கால பயன்பாட்டால் நச்சுத்தன்மை உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும்
என அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக துணிப் பைகள், காகிதப் பைகள் போன்ற மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க “மஞ்சப்பை” பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி, கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.
உறுதிமொழி மற்றும் எச்சரிக்கை
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது. விதிகளை மீறி தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இக்கூட்டத்தில் வணிகர் சங்க பொருளாளர் மாணிக்கம், செயலாளர் தருமன் உள்ளிட்ட வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)