Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரியில் துணை ஆய்வாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. 

தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ள 444 துணை ஆய்வாளர் (Sub-Inspector) தேர்விற்கான காலிப்பணியிட அறிவிப்புகளுக்கான விண்ணப்பிக்க கடைசி நாள் 07.04.2022 ஆகும்.

தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் (TNUSRB Sub Inspectors of Police Taluk & AR Exam- 2022) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காலை 10.30 மணிக்கு தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு (06.04.2022) புதன்கிழமை முதல் வகுப்புகள் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக்குறிப்புகள் வழங்கப்படும் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/3wLoLqA என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் தொலைபேசி எண்.04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். (TNUSRB Exam 2022) போட்டித் தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி., இஆப., அவர்கள் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884