தர்மபுரி அரசு தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனராக முனைவர் கு.பாலமுருகன் அவர்கள் பணியாற்றி வருகிறார், இவர் கடந்த 25 ஆண்டுகள் கல்விப்பணியில், உடற்கல்வி இயக்குனராகவும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராகவும், கல்லூரி உடற்கல்வி இயக்குனராகவும் பணி புரியும் காலத்தில் மாணவ மாணவிகள் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டி களிலும் , தேசிய /மாநில அளவிலான போட்டிகளிலும், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளிலும், சாதனை படைக்க பயிற்சி அளித்து உறுதுணையாக இருந்ததையும் பாராட்டியும், தர்மபுரி மாவட்டத்தில் இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக்குழுமம், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்து நடத்தியதை பாராட்டியும்,
2004-ம் ஆண்டிலிருந்து தருமபுரிமாவட்ட பாராஒலிம்பிக் சங்க செயலாளராக இருந்து பல மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப்பயிற்ச்சி அளித்தது அவர்களை தேசிய/மாநில அளவில் சாதனை படைக்க உறுதுணையாய் இருந்ததை பாராட்டியும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி அளித்தமையை பாராட்டியும் இவருக்கு அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை ஆசிரியர் பிரிவில் மொழிச்செம்மல் விருது வழங்கப்பட்டது.
மொழிச்செம்மல் விருதினை கல்லூரி முதல்வர் முனைவர்.ப.கி.கிள்ளிவளவன் அவர்கள் 02-03-2022 இன்று உடற்கல்வி இயக்குருக்கு வழங்கி வாழ்த்தினார். பேராசிரியர்களும், அலுவலகப்பணியாளர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.