வருடம்தோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்படும் கோவில் திருவிழாவில் நேற்று இரவு வீரபத்திர சாமி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் காலை முதல் அன்னதானம் தொடங்கி நடைபெற்றது சரியாக மாலை 3 மணி அளவில் மகா தேரோட்டம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது இந்நிகழ்வு ஸ்ரீ கடகலூர் மடாதிபதி முத்து வீரசுவாமிகள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கோடாரம்பட்டி, பொச்சாரம்பட்டி ,ஜக்கம்பட்டி, மந்தைமேடு, மல்லாபுரம், ஐங்கமையனூர், நாகனூர், சிகரலஅள்ளி, முது கம்பட்டி ,அரங்காபுரம் ஆகிய பத்து கிராமங்களைச் சார்ந்த பொதுமக்களும் , இப்பகுதியைகளை சார்ந்த ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், ஊர் நாயுடு,ஊர் செட்டியார் போன்ற முக்கியஸ்தர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்ட பின்னர் தேரை இழுத்தனர். நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.