Type Here to Get Search Results !

நவதான்யா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஊரக தோட்டகலை பணி அனுபவம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவியர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டியில், ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக இரண்டு மாதம் பயிற்சி பெற வந்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று பென்னாகரம் அடுத்த பருவதன அள்ளி கிராமத்தில் நவதான்யா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஊரக தோட்டகலை பணி அனுபவம் குறித்த பயிற்சி பெற வருகை தந்து நவதான்யா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டனர்.

அவர்களுக்கு டீப்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சங்கர்,நவதான்யா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் ஞானவேல் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies