பாலக்கோடு : வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல் மற்றும் நியமன குழு உறுப்பினர் தேர்தல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 மார்ச், 2022

பாலக்கோடு : வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல் மற்றும் நியமன குழு உறுப்பினர் தேர்தல்.

IMG-20220331-WA0027
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்  தேர்தல் மற்றும் நியமன குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.

இதில் வரி விதிப்புக் குழு உறுப்பினர்களாக  7- வார்டு உறுப்பினர் ரூஹித் 3, ஆவது வார்டு உறுப்பினர் பிரியா, 9- வார்டு உறுப்பினர் தீபா, 12வது வார்டு உறுப்பினர் சரவணன் ஆகியோர்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நியமன குழு உறுப்பினராக 15-வது வார்டு உறுப்பினர் PLR சிவசங்கரி ரவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாலக்கோடு பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்  மற்றும் செயல் அலுவலர் டார்த்தி வெற்றி பெற்ற உறுப்பினர்களை குழு உறுப்பினர்களாக அறிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வரி விதிப்பு மேல்முறையீடு மற்றும் நியமன குழு உறுப்பினராக பதிவேட்டில் கையொப்பம் இட்டு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

.com/img/a/

கருத்துகள் இல்லை:

Post Top Ad