நல்லம்பள்ளி அருகே உள்ள மானியதஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாபானு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் சிவசக்தி வரவேற்று பேசினார்.
இதில் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்போது அவர் பேசுகையில், பெற்ேறார் தங்கள் பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதை தினமும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை கட்டாயம் தடுக்க வேண்டும். அரசு பள்ளிக்கு முன்பும், பஸ் நிறுத்தம் பகுதியிலும் பள்ளி கல்லூரி மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
புறக்காவல் நிலையம்.
மானியதஅள்ளி ஊராட்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். மேலும் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார். கூட்டத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக