நான் முதல்வன்! திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும் எனவும், இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம்கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்.
தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடண் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஸ்ட ௩௦6 போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரிகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும் எனவும்,
இப்பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (எப முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும் எனவும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் industry 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும். மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள் 7 புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும் எனவும், திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும். பயிற்சி பெற்ற பயனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதையும், அதைத் தொடர்வதையும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதைத்தவிர, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்களும் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும்.
இத்திட்டத்தின் அனைத்து விவரங்களும் அடங்கிய வலைதள பலகை (௦1ல) உருவாக்கப்படும் எனவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை இப்புதிய திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை ஒருங்கிணைக்கும். மேலும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தை செயல்படுத்தும் என இத்திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய 'நான் முதல்வன்! என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரை, தருமபுரி மாவட்டத்தில் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 75 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 182 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில்லுள்ள கல்லூரிகளில் எல்.கு.டி டிஜிட்டல் திரை, புரொஜக்டர்கள், தொலைகாட்சிகள், கணினிகள், மடிக்கணினிகள் போன்ற சாதனங்களின் மூலம் இன்றைய தினம் (01.03.2022) நேரலையாக ஒளிப்பரப்பட்டது.
இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்.கி.டி திரை அமைக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை நேரலையில் ஒளிப்பரப்பப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் மாணவிகளோடு நேரலையை பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது: இளம் தலைமுறைகள் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "நான் முதல்வன்" - உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான இச்சிறப்பான திட்டத்தை இன்றைய தினம் தொடங்கி வைத்து உரையாற்றிய போது தெரிவித்த கருத்துக்களை நீங்கள் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறைகளாகிய நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த அதிகாரிகளாக, தலைவர்களாக பொறுப்புமிக்க பல்வேறு உயர் பதவிகளை வகிக்கக்கூடிய திறமையினையும், உயர்ந்த பண்பினையும், அறிவாற்றலையும் இளம் வயதிலேயே உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கு உங்களின் தன்னம்பிக்கையும், இலட்சியமும் உயர்ந்த இடத்தை அடைவதாக இப்போதிருந்தே இருந்திட வேண்டும். பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதற்காக பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அவை அனைத்தையும் மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு சிறந்த கல்வியை கற்றிட வேண்டும். நீங்கள் எதிர் காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கின்றீர்களா அதையே இலட்சியமாக கொண்டு உங்கள் கல்வி அறிவையும், திறமையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இளம் வயது திருமணம் என்பது அறவே இருக்கக் கூடாது. உங்களின் சிந்தனைகள் செயல்பாடுகள் அனைத்தும் கல்விலும் உயர்ந்த இலட்சியத்தை அடைவதாக மட்டுமே இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திரு.து.கணேஷ் மூர்த்தி, பாலக்கோடு வட்டாட்சியர் திரு.பாலமுருகன், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் கலந்துக் கொண்டனர்.