தருமபுரி மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையலர்களாக பணிபுரிந்து பணியிடையில் மரணமடைந்த 3 பணியாளர்களின் வாறரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, ஆப. அவர்கள் 28.02.2022 அன்று வழங்கினார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் தருமபுரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரிவின் சார்பில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் 3 நபர்களுக்கு வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம். அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலராக பணிபுரிந்து வந்த திருமதி. உண்ணாமலை என்பவர் பணியிடையில் மரணமடைந்ததை தொடர்ந்து, வாரிசுதாரரான அவரது மகள் திருமதி.அமுதா அவர்களுக்கு ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சாரப்பட்டி காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் அமைப்பாளர் பணிக்கான ஆணையினையும், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், காடுசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலராக பணிபுரிந்து வந்த திருமதி.செல்வி என்பவர் பணியிடையில் மாணமடைந்ததை தொடர்ந்து, வாரிசுதாரான அவரது மகள் திருமதி.சத்யா அவர்களுக்கு பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், சூடனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலர் பணிக்கான ஆணையினையும், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பில்பருத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலராக பணிபுரிந்து வந்த திருமதி.சென்னம்மாள் என்பவர் பணியிடையில் மரணமடைந்ததை தொடர்ந்து, வாரிசுதாரரான அவரது மகள் திருமதி.சி.தனலட்சுமி அவர்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பில்பருத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலர் பணிக்கான ஆணையினையும் என மொத்தம் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் வழங்கினார்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம், பண்ணவாடியான் காடு கிராமம், நாகமரை தரப்பு பகுதியைச் சேர்ந்த திரு.சுரேஷ் - திருமதி.நித்யா தம்பதியினரின் மகள் செல்வி.நவந்தா (வயது-13) என்பவர் எதிர்பாராத விதமாக மேட்டூர் நீர்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.4.00 இலட்சத்திற்கான காசோலையினை நேற்று (28.02.2022) நவநீதாவின் தாயார் திருமதி.நித்யா அவர்களிடம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) திரு.கே.கிராமசந்திரன் கலந்துகொண்டனர்.