சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 மார்ச், 2022

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது மளிகை கடைகளில் குட்கா விற்ற அதகப்பாடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). முனுசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்,  அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று அதியமான்கோட்டை, தொப்பூர் போலீசார் கடைகளில் சோதனை நடத்தினர், அப்போது குட்கா விற்றதாக சின்னசாமி (33), சக்திவேல் (49), மதுராஜ் (41) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad