போதையில் பள்ளி மாணவிகளிடம் தகராறு செய்யும் இளைஞர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 மார்ச், 2022

போதையில் பள்ளி மாணவிகளிடம் தகராறு செய்யும் இளைஞர்கள்.

அரூர் அடுத்த மாம்பாடி அரசு பள்ளியில் மாணவிகளை குடிபோதையில் தகராறு செய்ததாக பெற்றோர்கள் கவலை - போதையில் இருந்த இளைஞர் ஒருவரை அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பாடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தினசரி மாணவிகளை இளைஞர்கள் கேலி கிண்டல் செய்துவருவதாக மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மாலை நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பிரிவு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் பள்ளி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்து இளைஞர் ஒருவர் மது போதையில் கையில் கோன் ஐஸ்கிரீமை வைத்துக்கொண்டு மாணவிகளை கேலி கிண்டல் செய்துள்ளார். அப்போது அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில்,  காட்பாடி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன், எனவும் தன்னுடைய தம்பியை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்தேன் என பொய்யாக காவலர்களிடம் தெரிவித்துள்ளார். பின்பு அந்த இளைஞரை பிடித்து கஞ்சா பொட்டலம் வைத்துள்ளாரா என சோதனை செய்தனர். அந்த இளைஞர் போதையில் சிரித்துக் கொண்டே இருந்ததால்

ஆத்திரமடைந்த காவல்துறையினர் அந்த இளைஞரை அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது தெரிவித்த கிராம மக்கள் இப்பள்ளியில் பயின்றுவரும் மாணவிகளை இளைஞர்கள் தேவையில்லாமல் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வருகின்றனர் எனவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர். 

மேலும் குடிபோதையிலும், கஞ்சா போதையிலும் 5 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்பகுதியில் தொடர்ந்து பெண்களை கேலி கிண்டல் செய்து வருவதாகவும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை காவல்துறை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad