தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சி சக்கல் நத்தம் கிராமத்தில் விவசாயம் மற்றும் பெண்கள் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான திட்ட விளக்க பயிற்சி முகாம் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
நபார்டு கே எப் டபிள்யூ காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க தழுவிய யுக்திகளை வலுப்படுத்துவதும் புதிய வழிமுறைகளை , குறிப்பாக மண்ணை மீட்டெடுக்கும் திட்ட செயல்பாடுகளில் விவசாய குழுக்களை வலுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
டீப்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சங்கர், நவதான்யா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சிஇஓ ஞானவேல்,திட்ட பொறியாளர் சிவநாதன்,வேளாண் அலுவலர் அருள் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக 63 திட்ட பயனாளர்களுக்கு புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் ஒரு பயனாளர்க்கு தலா 4 கோழிகள் வீதம் வழங்கப்பட்டது.
இறுதியாக திருச்சி தோட்டக்கலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவிகள் நன்றி உரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக