தர்மபுரி மாவட்டம், பஞ்சபள்ளி அடுத்த கும்மனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது.29 ),விவசாயி இவருக்கு கிருத்திகா என்பவருடன் கடந்த, 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பிணியான கிருத்திகா
பிரசவத்திற்காக மாரண்டஅள்ளி அருகே கரகூர் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். குழந்தை பிறந்து, 7 மாதங்களாகியும் குமாருடன் குடும்ப நடத்த வரவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் கிருத்திகாவை வீட்டிற்கு அழைத்து வர சென்ற போது அவர் மறுத்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த குமார் குடித்துவிட்டு வந்து மதுபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.