தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கான வார்டு உறுப்பினர் தேர்தல் நடைப்பெற்றது, தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று பாலக்கோடு பேரூராட்சியில் நடைப்பெற்றது.
பாலக்கோடு பேரூராட்சி தேர்தல் அலுவலர் டார்த்தி வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு பேருராட்சி மன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களின் ஆசியோடு அதிமுகவின் 1 மற்றும் 2வது வார்டு உறுப்பினர்கள் குருமணிநாதன் மற்றும் விமலன் ஆகியோர் அரசியலமைப்பு சட்டப்படி உறுதி மொழி படித்து பதவி ஏற்றுகொண்டனர்..