தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளான மார்ச் 1 ம் நாள் இன்று நான் முதல்வன் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு "நான் முதல்வன்" (உலகை வெல்லும் இளைய தமிழகம்) என்னும் தலைப்பில் திறன் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து உரையாற்றினார்.நான் முதல்வன் திறன் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா நிகழ்ச்சி பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பி. அக்ராகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்நிகழ்ச்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரில் காணும் வகையில் எல்இடி திரை அமைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கூடியிருந்து கண்டு கழித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ச.வையாபுரி, உதவி தலைமை ஆசிரியர் இரா. செலீனா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமரன், தமிழ்நாடு கிராம வங்கி பி. அக்ராகரம் கிளை மேலாளர் முரளிதரன், ஆசிரியர்கள் கருணாநிதி, அறிவழகன், ரமேஷ்,குழந்தைவேல், நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர்கள் பிரபாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.