கடந்த ஆண்டை காட்டி லும் இந்த ஆண்டு புளி மகசூல் அதிகரித்துள்ளது. இதில் அதிகளவு மஞ்சவாடி, சிட்லிங் பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட மலைப்பிரதேச பகுதிகளில் அதிகளவில் புளி மகசூல் அதிகரித்துள்ளது. இதனை டன் கணக் கில் வியாபாரிகள் வாங்கி, கொட்டை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி முதல் மே மாதம் வரை இந்த புளி வியாபாரம் ஜோராக நடக்கும்.
தற்போது ஒரு கிலோ கொட்டை எடுத்த புளி 65 ரூபாய்க்கும், ரேக் புளி 120 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.கொட்டை புளி 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை 800 ரூபாய்க்கும், ஒரு டன் புளி 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப் படுகிறது.
பெரும்பாலான மக்கள் மரங்கள் மொத்தமாக வாங்கி, மரத்தில் இருந்து புளி உலுக்கி, அதனை நன்கு காய வைத்து, நசுக்கிய பின்பு வாரந்தோறும் சேலம் பஜாரில் நடைபெறும் புளி சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து புளி வியா பாரிகள் கூறும் போது:
அதிகளவில் தர்மபுரி மாவட்டத்தில் புளி மகசூல் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் புளி தொழில் குடிசைத் தொழிலாக மாறியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, அரூர், பென்னாகரம், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர்.
கிராமங்களில் விவசாய கூலி தொழில் செய்யும் பொது மக்கள் மொத்த வியாபாரிகள் இடத்தில் புலிகளை வாங்கி காயவைக்கின்றனர். பின்னர் தோல் நீக்கி புலியில் இருந்து கொட்டை பிரித்தெடுத்து ரெக் வடிவில் புலியை மொத்த வியாபாரிகள் இடத்தில் ஒரு ரேட் பத்து ரூபாய்க்கு கொடுக்கின்றனர்.
இந்த புலியை பொதுமக்களிடத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புளி விலை, 100 ரூபாய்க்கு மேல் விற்றால் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, என்பது ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் தற்போது, 60 ரூபாயிலிருந்து,65 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அது இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தால் புளி விலை குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.