தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவியர்கள்
ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக இரண்டு மாதம் பயிற்சி பெற வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக பாப்பாரப்பட்டி கிராம விவசாயிகளுக்கு நீம்மஸ்திரம் பற்றி செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.
அதிக அளவில் சார் உறுஞ்சி பூச்சி கட்டுப்பாடு , நல்ல அளவிலான தாவரங்களைப் பயன்படுத்தும் போது வெற்றி விகிதம் அதிகமாக இருக்கும். அதிக வேகமான மற்றும் வலிமையான வேர் வளர்ச்சி , அதிக மகசூல் பெறலாம் என்பது உள்ளிட்ட நீம்மஸ்திரத்தின் நன்மைகள் குறித்து விரிவாக கூறி விளக்கம் அளித்தனர்
கூடுதலாக, நீம்மஸ்திரத்தின் செயல் முறை, பயன்படுத்தும் முறை ஆகியவற்றை விவசாயிகளுக்கு விரிவாக கூறினர்.
இப்பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக