தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியில் நேற்று மாலை 3 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் கடித்ததில் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு
படிக்கும் நிஷா (வயது.15), அதே பகுதியில் தொடக்கப் பள்ளியில் 2வது படிக்கும் மாணவி தாரிகா (வயது. 8) மற்றொரு பள்ளி மாணவி, கோமதி (வயது.30), நரசிம்மன் (வயது .40), சந்திரசேகரன் (வயது .49) உள்ளிட்ட 8 நபர்களை நாய் கடித்ததில் படுகாயமடைந்தனர்.
இவர்களை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வெறி நாய்கள் மனிதர்களை மட்டுமின்றி ஆடு, மாடு, கோழி என சகலத்தையும் கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தி உள்ளனர்.

