Type Here to Get Search Results !

ஓகேனக்கலில் 3 பரிசல் ஓட்டிகள் உரிமம் இரத்து.

லைப் ஜாக்கெட் அணியாமல் சுற்றுலா பயணிகளை பரிசில் ஏற்றிச்சென்றமூ ன்று பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கேரளா கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்று மகிழ்வர். 

இந்தநிலையில் பரிசலில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு  லைப் ஜாக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் லைப் ஜாக்கெட் அணியாமல் சுற்றுலாப் பயணிகளில் சிலர் பரிசலில் பயணம் மேற்கொண்டனர். 

இதுதொடர்பாக பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் லைப் ஜாக்கெட் அணிவிக்காமல் பரிசலில் அழைத்து சென்ற தருமன், வெங்கடேசன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் பரிசல் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் பரிசல் ஓட்டிகள்  இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பென்னாகரம்  வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies